< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
9 July 2023 12:56 AM IST

இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் மற்றும் நெல்லை காவேரி மருத்துவமனை சார்பில், சேரன்மாதேவி நீதிமன்ற வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை நீதிபதி ராஜலிங்கம் தொடங்கி வைத்தார்.

இதில் டாக்டர்கள் சரத் சடையப்பன், பெலிண்டா ஆனட் ஆகியோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் செல்வகுமார், செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் ஆறுமுகம், அரசு வக்கீல் கருணாநிதி மற்றும் மூத்த வக்கீல்கள், சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்