திருவள்ளூர்
ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா
|ஆதிதிராவிட பெண்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் ஊராட்சியில் தோக்கமூர் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் ஆதிதிராவிட பெண்களுக்கு 1 கோடியே 81 லட்சம் மதிப்பிலான 2 ஏக்கர் 94 சென்ட் நிலத்தில் 90 வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியின நலத்துறை முடிவு செய்தது. அதன்படி நேற்று பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் அலுவலர் செல்வராணி, பொன்னேரி சிறப்பு தாசில்தார் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்மிடிப்பூண்டி தாசில்தார் ப்ரீத்தி அனைவரையும் வரவேற்றார்.
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 90 ஆதிதிராவிட பெண் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்க அலுவலர் ஜெயகர்பிரபு தோக்கமூர் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.