< Back
மாநில செய்திகள்
இலவச கண் பரிசோதனை முகாம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

தினத்தந்தி
|
13 Sep 2023 6:04 PM GMT

திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் மற்றும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமிற்கு உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். டாக்டர் அஜய்குமார், ரதி ஏஞ்சல், தனிஷியா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண்பரிசோனை செய்தனர்.

முகாமில் 65 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, 11 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முகாமில் இந்தியன் வங்கி ஓய்வு பெற்ற மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ராணுவ வீரர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்