< Back
மாநில செய்திகள்
இலவச வேட்டி, சேலைகள் வந்தன
நீலகிரி
மாநில செய்திகள்

இலவச வேட்டி, சேலைகள் வந்தன

தினத்தந்தி
|
2 Jan 2023 6:45 PM GMT

பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வந்தன

கோத்தகிரி,

கோத்தகிரி தாலூகாவில் மொத்தம் 63 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அரிசி மட்டும் வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் 28 ஆயிரத்து 905 பேர் பயனாளிகளாக உள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள், ரொக்க பணம் மற்றும் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக தமிழக அரசு ஜவுளி நிறுவனம் மூலம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வேட்டி, சேலைகள் அடங்கிய மூட்டைகள் பயனாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு பொங்கல் பண்டிகைக்கு வினியோகம் செய்வதற்காக, 2 லாரிகளில் வேட்டி, சேலைகள் கொண்டு வரப்பட்டன. இவை மூட்டைகளில் தாசில்தார் அலுவலக மேல்தளத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த இலவச வேட்டி, சேலைகள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்