ராமநாதபுரம்
விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
|விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் 193 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் அழகர் வேல் பாண்டியன், மாணிக்கவேல், கோவிந்தன், இந்திரா செல்லத்துரை, சாயல்குடி நகர துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி புனித ராஜன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன் காலாகுளம் சேகர், உதவி தலைமை ஆசிரியர்கள் லதா, முருகன், வேல்முருகன், பெண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியை சமீம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரி நன்றி கூறினார்.