< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

தினத்தந்தி
|
11 Aug 2022 4:31 PM GMT

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

மத்தூர்:-

போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் அனீஸ் குமார், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். மொத்தம் 358 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

விழாவில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பழனி, சங்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்