< Back
மாநில செய்திகள்
லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
தேனி
மாநில செய்திகள்

லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
5 Aug 2023 2:30 AM IST

லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சரவணக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இதில், பெரியகுளம் ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன், லட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி சந்திரன் மற்றும் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்