< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி திட்டம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
|7 March 2023 10:04 PM IST
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை கோட்டூர்புரத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதே சமயம் மாணவர்களும் அதற்கு தயாராக இருக்க என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.