< Back
மாநில செய்திகள்
மத்திய ரிசர்வ் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மத்திய ரிசர்வ் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி

தினத்தந்தி
|
18 April 2023 6:45 PM GMT

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் மத்திய ரிசர்வ் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

மத்திய ரிசர்வ் படை

மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்காக 9ஆயிரத்து 212 பணியிடங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரையும் தேர்வு செய்யும் வகையில் இணையவழியில் தேர்வுகள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த தேர்விற்கு 10-ம் வகுப்பு, பிளஸ்- 2 முடித்தவர்கள் இந்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதிக்குள் http://www.crpf.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பு

தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் . இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்