< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தேனி
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தினத்தந்தி
|
29 Sep 2023 12:15 AM GMT

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட நிரலின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்- 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு நடப்பு ஆண்டில் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களை நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். இந்த தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் இந்த நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்