பெரம்பலூர்
மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
|மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள எம்.டி.எஸ். தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந்தேதி ஆகும். தேர்வை பொறுத்தவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது என்பதாலும், கல்வி தகுதி 10-ஆம் வகுப்பு என்பதாலும் மேலும் முதல் முறையாக தமிழிலும் தேர்வு எழுதலாம் என்பதாலும், பெண்கள் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் முற்றிலும் இலவசம் என்பதாலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலை நாடுநர்கள் அனைவரும் இத்தேர்விற்கு தவறாது https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அந்த தேர்வுக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மேற்காணும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பயன்பெறலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.