< Back
மாநில செய்திகள்
குரூப்-1, 2 போட்டித் தேர்வுகளுக்கு அரியலூரில் நாளைமறுநாள் இலவச பயிற்சி வகுப்புகள்
அரியலூர்
மாநில செய்திகள்

குரூப்-1, 2 போட்டித் தேர்வுகளுக்கு அரியலூரில் நாளைமறுநாள் இலவச பயிற்சி வகுப்புகள்

தினத்தந்தி
|
12 July 2023 12:43 AM IST

குரூப்-1, 2 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அரியலூரில் நாளைமறுநாள் தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி I மற்றும் தொகுதி II பணிக்காலியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரிதேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த, போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்