பெரம்பலூர்
போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்-பெரம்பலூரில் நாளை மறுநாள் தொடக்கம்
|போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கும், ஐ.பி.பி.எஸ். பணியிடத்திற்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-1- தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக நாளை மறுநாள் (புதன்கிழமை) இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/spreadsheets/d/1- awvRlqTTZQGRvSduGzfaVHMIDQNXXlDXS6jBdBQp5w/edit?usp=sharingஇந்த Google Sheet Link-ல் தங்களுடைய விவரங்களை நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) உள்ளீடு செய்யப்பட வேண்டும். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய பணியிடத்திற்கு விண்ணப்பித்த நகல், ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வருகை புரியும் போது வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.