< Back
மாநில செய்திகள்
மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு நாளை மறுநாள் இலவச பயிற்சி வகுப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு நாளை மறுநாள் இலவச பயிற்சி வகுப்பு

தினத்தந்தி
|
23 April 2023 6:30 PM GMT

மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு பெரம்பலூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது/

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் மத்திய-மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட 2-ம் நிலை காவலர்-போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வுகளுக்கு கடந்த 19-ந்தேதி இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. மேற்காணும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்