< Back
மாநில செய்திகள்
போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
கரூர்
மாநில செய்திகள்

போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

தினத்தந்தி
|
4 April 2023 11:42 PM IST

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது

போட்டித்தேர்வு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசால் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் கான்ஸ்டபில் 9,212 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 593 பணிக்காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்விற்கான பணிக்காலியிடம் மற்றும் தேர்விற்கு http://www.crpf.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 25-ந் தேதி ஆகும். கணினி முறைத் தேர்வுகள் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 10-ந் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்பு

மேலும் எஸ்.எஸ்.சி. பேஸ் 11-க்கான தேர்வுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு 5,369 பணிக்காலியிடங்கள் உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04324-223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது வெண்ணைமலையில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைப்பேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து போட்டித்தேர்வுக்கான காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கலந்துரையாடல்

அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஊக்க உரைகள் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும் இதன் மறுஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்