< Back
மாநில செய்திகள்
பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டுவராத சிறப்பான திட்டம் - அமைச்சர் சிவசங்கர்
மாநில செய்திகள்

பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டுவராத சிறப்பான திட்டம் - அமைச்சர் சிவசங்கர்

தினத்தந்தி
|
28 Aug 2022 6:06 PM IST

பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டுவராத சிறப்பான திட்டம் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெண்களின் பயணம் 40 சதவீதத்திலிருந்து 60, 62 சதவீதத்தைத் தாண்டி, சென்னையில் 69 சதவீதம் என்கிற அளவுக்கு பெண்களின் போக்குவரத்து சதவீதம் அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டுவராத சிறப்பான திட்டம் ஆகும். பெண்களுக்கு முதல்-அமைச்சர் வழங்கியுள்ள இலவச பேருந்து பயண திட்டம் என்பது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாகத்தான் உள்ளது.

தானியங்கி டிக்கெட் மூலம் அனைத்து பேருந்துகளிலும் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் கேமரா வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே 500 பேருந்துகளில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த பேருந்துகளை சரி செய்து வருகிறோம். பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் வண்ணம் தீட்டுவது வீண் செலவு தான், இதனால் அதில் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்