மதுரை
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
|அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை தளபதி எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதூர்,
மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி நிர்வாகி முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஷேக்நபி வரவேற்றார். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கோ.தளபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கினார். மதுரை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ராகவன்,, கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், 12-வது வார்டு கவுன்சிலர் ராதாமணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாணவரணி புதூர் சின்னத்துரை கே.கே. நகர் பகுதிச்செயலாளர் அக்ரி கணேசன், 12-வது வட்டச்செயலாளர் காந்திபுரம் மருது, 14-வது வட்டச்செயலாளர் புதூர் வேலு, ஆழ்வார், தொழில் அதிபர் வி.பூமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதவித்தலைமை ஆசிரியர்கள் ஜாகீர் உசேன், ரஹ்மத்துல்லாஹ், பட்டதாரி ஆசிரியர் தவுபீக் ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முடிவில் முதுகலை தமிழாசிரியர் நூருல்லாஹ், நன்றி கூறினர்.