< Back
மாநில செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இளையான்குடி,

இளையான்குடியில் முனைவென்றி அரசு மேல்நிலைப்பள்ளி, இளையான்குடி மேலப்பள்ளி வாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹமீதியா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழரசி எம்.எல்.ஏ.தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், பாலசுப்பிரமணியன், முனைவென்றி ஊராட்சி தலைவர் குருவம்மாள், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், பேரூராட்சி துணை தலைவர் இப்ராஹிம், பள்ளி தாளாளர் காதர்பாட்சா, கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன், இளைஞர் அணி செயலாளர் பைரோஸ் கான், மாவட்ட பிரதிநிதிகள் ராஜபாண்டி, கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்