ராமநாதபுரம்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
|மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்ப்பட்டன.
கமுதி
கமுதி அருகே கே.எம். கோட்டை புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடை பெற்றது. விழாவிற்கு, பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியருமான யூதா போஸ்கோ கப்புசின் தலைமை தாங்கினார். ஆசிரியைகள் கசில்டா, அருள் லூயிஸ் ஆகியோர் வரவேற்று பேசினர். மாவட்ட கவுன்சிலரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளருமான வாசுதேவன் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன், ஊராட்சி தலைவர் முனியக்காள் செல்வம், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மரிய ஜினோ, வின் தொண்டு நிறுவன தலைவர் அருள்செல்வி மற்றும் கப்புச்சின் தந்தையர்கள் சேசுராஜ், ஜான்பிரபு, சார்லஸ், அருட்சகோதரி மரிய இருதயம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். மேலும் கடந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை அருள்சூசை அந்தோணியம்மாள் நன்றி கூறினார்.