< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
|25 Sept 2023 12:15 AM IST
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
பரமக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் வக்கீல் பூமிநாதன், பரமக்குடி நகர் மன்ற உறுப்பினர் பாக்கியம் ஆகியோர் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.