< Back
மாநில செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

திருப்புவனம்

திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

பின்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை தேவிகாராணி வரவேற்றார். தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன், ராமு, நகர் செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சேகர், மடப்புரம் மகேந்திரன், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பாண்டியர்கிருஷ்ணன், பேரூராட்சி உறுப்பினர் ராமலெட்சுமி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்