வேலூர்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
|பரதராமி, கல்லப்பாடி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை கதிர்ஆனந்த் எம்.பி. வழங்கினார்.
குடியாத்தம்
குடியாத்தம் அடுத்த பரதராமி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், கல்லப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் பெ.கேசவேலு, துணைத்தலைவர் சாந்திமகாலிங்கம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.ஜே.பத்ரிநாத், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜி.ஆர்.கே.மூர்த்தி, கல்லப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரதராமி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.தேசாய் வரவேற்றார்.
மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர் ரவி, மாநில கொள்கை பரப்பு துணைசெயலாளர் குடியாத்தம் குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கலந்து கொண்டு 140 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தாட்டிமானபல்லி ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.பி.சக்திதாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ராஜ்கமல், ஒன்றிய துணை செயலாளர் சாவித்திரிமணி, மாவட்ட பிரதிநிதிகள் ரா.அண்ணாதுரை, சி.ஆனந்தன் உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பரதராமி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜி.லதா நன்றி கூறினார்.