< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

தினத்தந்தி
|
9 Aug 2023 12:15 AM IST

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது

தேவகோட்டை

தேவகோட்டை பெத்தாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி தலைமை தாங்கி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், பெத்தாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் செயலர் வெள்ளையன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜம், மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் பாப்பாங்கோட்டை பூமிநாதன் மற்றும் துணை தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்