திண்டுக்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
|குஜிலியம்பாறை, காசிபாளையம் ஆகிய பகுதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
விலையில்லா சைக்கிள்
வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை தாங்கினார்.
பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சுப்புராயன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். விழாவில் காந்திராஜன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். வேடசந்தூர் நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
குஜிலியம்பாறை
இதேபோல் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு குஜிலியம்பாறை ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி, 231 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் கீதா, பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பாளையம் தி.மு.க. பேரூர் செயலாளர் கதிரவன், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.