< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வழங்கினார்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வழங்கினார்

தினத்தந்தி
|
1 Aug 2023 1:45 PM IST

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சிங்கப்பெருமாள் கோவில்,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரை பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் கே.பி.ராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. காட்டாங்கொளத்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 96 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இதைபோல திருக்கழுக்குன்றம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு 627 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்