< Back
மாநில செய்திகள்
மதுரையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
மதுரை
மாநில செய்திகள்

மதுரையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

தினத்தந்தி
|
6 Oct 2023 6:28 AM IST

மதுரையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை பூமிநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்


மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட எம்.ஏ.வி.எம்.எம். பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை பூமிநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார். முன்னதாக தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அனுப்பானடி 88-வது வார்டில் தெய்வகன்னி தெருவில் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, அதேபோல் கிறிஸ்தவ தெருவில் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆழ்துளை கிணறுகளை பூமிநாதன் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் தெற்கு மண்டல தலைவர் முகேஷ்சர்மா, கவுன்சிலர்கள் பிரேமா, செய்யது அபுதாகீர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி, அவைத்தலைவர் சுப்பையா, மாநில தொண்டரணி துணை செயலாளர் பச்சமுத்து, பகுதி செயலாளர் கோவிந்தன், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் திருப்பதி, தி.மு.க. வட்ட செயலாளர் தாமோதரன், ம.தி.மு.க. வட்ட செயலாளர் நாகரத்தினம், அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்