ராணிப்பேட்டை
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 90 மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
|கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 90 மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
சோளிங்கர்
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 90 மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
சோளிங்கரை அடுத்த கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பார்வதி மணிகண்டன், ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூடலூர் கலாசகாதேவன், ஐபேடு ஜானகி மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் கீதாதமிழ்வாணன், சாவித்திரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் 47 மாணவர்கள், 43 மாணவிகள் என மொத்தம் 90 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன், அசோகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி உதவி ஆசிரியர் மோகனம் நன்றி கூறினார்.