< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தினத்தந்தி
|
6 Oct 2023 8:18 PM IST

சோழவரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள நிலையில் அங்கு 372 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிளஸ்-2 வகுப்பில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய குழு ராஜாத்திசெல்வசேகரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன், பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இவ்விழாவில் பிளஸ்-2 வகுப்பில் பயிலும் 36 பேருக்கு இலவச சைக்கிள்களை பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் வழங்கினார். இவ்விழாவில் ஒன்றிய கவுன்சிலர் மொழியரசிசெல்வம் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்