< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தினத்தந்தி
|
13 Nov 2022 12:40 AM IST

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மிலிட்டரி லைன்ஸ் சேகர தலைவர் குருவானவர் பிரடரிக் சத்தியசாமுவேல் தலைமை தாங்கி, 488 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் எட்வின் மைக்கேல்தாஸ், பள்ளியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் அகஸ்டின் முத்தையா, ஜெயசீலன், சவுந்திரம், ஜேசுவடியான், ஆசிரியர்கள் தேவகளஞ்சியம், பிராங்ளின், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்