< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
16 Oct 2022 12:15 AM IST

திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திட்டச்சேரி:

திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கி 76 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், அபிநயா அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கம், பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் தியாகராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பானந்தம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரமேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் திருமாவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்