< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
3 Oct 2022 12:15 AM IST

சீர்காழி பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

சீர்காழி:

சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரூபி சாந்தகுமாரி தலைமை தாங்கினார். சீர்காழி நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணைத்தலைவர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஷீலா வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். விழாவில் நகரசபை உறுப்பினர்கள் முபாரக் அலி, ராமு, தி.மு.க. இளைஞரணி நிர்வாகி ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் விஜய் அமிர்தராஜ் நன்றி கூறினார். இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் அரசு ஆதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்பு செழியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் சாமிநாதன், கமலநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்