மயிலாடுதுறை
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|சுவேதாரண்யேஸ்வரர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்
திருவெண்காடு:
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்துராமன் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார். இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், தொழிற்சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மூத்த ஆசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.