திருநெல்வேலி
மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
|மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இட்டமொழி:
நாங்குநேரி தொகுதியில் உள்ள இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளி, பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தி.மு.க. நாங்குநேரி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆரோக்கிய எட்வின், ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் அகஸ்டின் கீதராஜ், பிரேமா எபநேசர், பஞ்சாயத்து தலைவர்கள் வி.இஸ்ரவேல் பிரபாகரன் (இலங்குளம்), சுமதி (இட்டமொழி), சாந்தகுமாரி (மறுகால்குறிச்சி), மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் என்.ஞானராஜ், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருள்ராஜ் டார்வின், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நம்பித்துரை, ராமஜெயம், டபிள்யு.ராஜசிங், ஜெஸ்கர்ராஜா, வாகைதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.