< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
5 Sept 2022 11:45 PM IST

ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

குத்தாலம்:

குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார்‌.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் சிவஞானசுந்தரி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணன் வரவேற்றார். விழாவில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெண்ணிலா ராஜ்குமார், சசிகலா திருமுருகன்,பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெஸ்லி ஆக்னஸ் பிரேமலதா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்