< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:03 AM IST

கமுதி அருகே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

கமுதி அருகே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கி மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 510 மாணவர்களுக்கும் 592 மாணவிகளுக்கும் என 1,102 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் பெருநாழி போஸ், கமுதி யூனியன் தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத்தலைவர் சித்ரா தேவி அய்யனார், கமுதி ஒன்றிய செயலாளர் வாசுதேவன். மாவட்ட திட்ட குழு உறுப்பினர் பெருநாழி போஸ் சசிகுமார், வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் பழக்கடை ஆதி, கமுதி வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கமுதி தாசில்தார் சேதுராமன், கமுதி யூனியன் தலைவர்கள் சங்கர பாண்டியன், மணிமேகலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி, பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்