< Back
மாநில செய்திகள்
கோனூர் அரசு பள்ளியில்       மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்;    லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கோனூர் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்; லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

கோனூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

காணை,

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி காணை ஒன்றியம் கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மருத்துவ அணி இணைச்செயலாளருமான டாக்டர் இரா.லட்சுமணன் கலந்துகொண்டு 124 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் காணை ஒன்றிய தி.மு.க. செயலாளர் கல்பட்டு ராஜா, ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், கொத்தமங்கலம் சந்திரசேகர், பெரும்பாக்கம் சுந்தரமூர்த்தி, ராஜேந்திரன், கிளைச்செயலாளர்கள் முருகதாஸ், ஜெயக்கொடி, ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கர், ஒன்றிய கவுன்சிலர் தேவபூஷ்ணம் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மண்ணாங்கட்டி, பொருளாளர் வரதராஜன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுகுணகுமாரி லட்சுமிநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்