< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|22 Sept 2023 10:44 PM IST
நாகவேடு ஊராட்சியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகவேடு ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு 27 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து சம்பத்துராயன்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் 42 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தி பாலசுப்பிரமணியன் (நாகவேடு), ஜோதி அருணாச்சலம் (சிறுணமல்லி), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கரி செல்லப்பன், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைஞர்தாசன், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.