< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
22 Sept 2023 12:15 AM IST

ஆக்கூர் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்ப்ட்டது.

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் கலந்து கொண்டு 140 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். மேலும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 27 விலையில்லா சைக்கிள் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அன்பழகன், அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிங்காரவேலு மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் குணசுந்தரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்