< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|3 Sept 2023 12:15 AM IST
பரமத்திவேலூர்
ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் அப்புசாமி வரவேற்றார். வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி, வார்டு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு 2022-2023 மற்றும் 2023-2024-ம் கல்வி ஆண்டுகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். முடிவில் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் லோகேஸ்வரன் நன்றி கூறினார்.