< Back
மாநில செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
24 Aug 2023 12:15 AM IST

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பள்ளிக்கு வழங்கப்பட்ட இருக்கைகள், மேஜைகளை மாங்குடி, எம்.எல்.ஏ பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்