< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
|9 Aug 2023 12:15 AM IST
இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
தில்லைவிளாகம்:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் 33 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. பொறுப்பு தலைமை ஆசிரியர் கவிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.