விழுப்புரம்
விக்கிரவாண்டி அரசு பள்ளியில்1,263 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்அமைச்சர் பொன்முடி வழங்கினார்
|விக்கிரவாண்டி அரசு பள்ளியில் நடந்த விழாவில் 1,263 மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி, தென்பேர், தும்பூர், பனையபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பாபு ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விக்கிரவாண்டி, தென்பேர், தும்பூர், பனையபுரம் ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 1,263 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இந்த விழாவில் தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரிமன்னன், ஒன்றியக்குழு தலைவர் சங்கீதஅரசி ரவிதுரை, துணைத் தலைவர் ஜீவிதா ரவி, பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம், துணைத் தலைவர் பாலாஜி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, ஆவின் இயக்குனர் அரிகரன், மாணவரணி யுவராஜ், சபியுல்லா, அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விக்கிரவாண்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியை ராதா நன்றி கூறினார்.