< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|30 July 2023 1:20 AM IST
தினத்தந்தி செய்தி எதிரொலியாக மேலூரில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
மேலூர்,
மேலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலையில்லா சைக்கிள்கள் பல மாதங்களாக வழங்கப்படாமல் திறந்த வெளியில் கிடந்தன. மழை பெய்ததால் செடி, கொடிகள் சைக்கிள்களை சூழ்ந்தன. இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மேலூர் நகராட்சி தலைவர் முகமதுயாசின் விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு வழங்கினார். விரைந்து நடவடிக்கை எடுக்க உதவிய தினத்தந்திக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மாணவிகள், பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.