தூத்துக்குடி
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
|விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தவசிமுத்து தலைமை தாங்கினார். விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, நகரச் செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியில் படிக்கும் 238 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 190 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், பேரூராட்சி துணைத் தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் 65 பேருக்கு இலவச சைக்கிளை எம்.எல்.ஏ. வழங்கினார் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.