< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

பள்ளி 581 மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

கமுதி

பள்ளி 581 மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்

கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி, விலை இல்லா சைக்கிள்களை வழங்கினார். இவ்விழாவில் பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப்ரசூல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிகளின் செயலர்கள் சதீஷ்குமார், சிவமுருகன், தலைமை ஆசிரியர்கள் மாரிமுத்து, சேர்மம் ஆகியோர் வரவேற்று பேசினர்.

விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறும்போது,

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை பல வருடங்களாக இருந்து வருகிறது. இதனை சரிசெய்யும் விதத்தில் தற்போது கரூர் மாவட்டத்தில் இருந்து, ரூ.2200 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்ட பகுதி முழுவம் குடிநீர் கிடைக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும். மேலும் கமுதி பைபாஸ் சாலை, நகர் பகுதிகளில் சாலை, கிராமப்புற பகுதிகளில் மின்சார வசதி போன்றவை ஏற்படுத்தி தரப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழிபோஸ், கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப்சஹாராணி, வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, கவுன்சிலர் சசிக்குமார், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி, ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சி

இதேபோல் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினர்.

இவ்விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அரசு பொது தேர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.

மேலும் செய்திகள்