தூத்துக்குடி
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
|பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் ஸ்ரீமுத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பவானி, தர்மகர்த்தா அர்சுனன், ஊர் தலைவர் அமிர்தராஜ், கல்விக்குழு தலைவர் சின்னத்தங்கம், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவி, சாயர்புரம் நகர பஞ்சாயத்து தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் ஜெயக்குமார், முன்னாள் தலைவர் ஜெயசீலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப், நகர தி.மு.க. செயலாளர் கண்ணன், சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம். சாயர்புரம் வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி, மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் கூட்டாம்புளி சந்திரபோஸ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.