விருதுநகர்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் விருதுநகர் எம்.எல்.ஏ.வான ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கலந்து கொண்டு 94 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசும் போது, பள்ளிக்கு வருவதற்கு பஸ்சிற்காக காத்திருக்க வேண்டியதில்லை. சைக்கிளில் வருவது உடல் நலத்திற்கு உகந்தது. எனவே மாணவ மாணவிகள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். கல்லூரி மாணவிளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறார் என்றார்.
மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், சத்திரரெட்டியபட்டி பஞ்சாயத்து தலைவர் மருதராஜ், பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.