< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மதுரை
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
24 Sept 2023 1:26 AM IST

திருப்பரங்குன்றம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியை கயல்விழி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மருதம்மாள், துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல், மதுரை மாநகராட்சியின் 99-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் உசிலை சிவா ஆகியோர் கலந்து கொண்டு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 100 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்