< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
14 Sep 2023 5:53 PM GMT

நெமிலி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு 70 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இதேபோல பின்னாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 52 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பவானி வடிவேலு (சயனபுரம்), சிவ.மணிவண்ணன் (பின்னாவரம்), பின்னாவரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமார், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்