< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
|13 Sept 2023 12:15 AM IST
முதுகுளத்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலி ராவுத்தர் சாஹிப் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கோதண்டம், ஜமாத் தலைவர் அலாவுதீன், பள்ளியின் தாளாளர் முபாரக் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கரீம் கனி அனைவரையும் வரவேற்றார். இதில் 5 மாணவர்கள், 23 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை ஊராட்சி மன்ற தலைவர் அபூபக்கர் சித்திக் வழங்கினார்.